தற்காலத் திட்டங்கள்

a3

எமது சிறுவர் இல்லத்தில் 20க்கும் மேற்பட்ட பெற்றோரை இழந்த சிறுவர்கள் பராமரிக்கப்பட்டுவருகின்றார்கள். பேல்வேறுப்பட்ட அசாதரன நிலைமை காரணமாக இவ்கள் தங்களின் குடும்பங்களை விட்டு பிரிந்து எமது சிறுவர் இல்லத்தில் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கை செலவுக்கான முழு பொறுளாதார வளத்தையும் எமது நிறவனமே பொறுப்பேற்று வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

 

 

 

a1

எமது நிறுவன ஸ்தாபகர் மதிப்பிற்குறிய திரு. வாமதேவா தியாகேந்திரன் அவர்களின் 62வது பிறந்ததின வைபவம் (2- 12 – 2013) அன்று சொர்ணாம்பிகை மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. இதில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுந்தரம் அருமைநாயகம் உட்பட பல முக்கியஸ்தர்களும், பயனாளிகளும், ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.வறுமை காரணமாக கல்வியை தொடரமுடியாத மாணவர்கள், போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோரை இழந்த மாணவர்கள் அத்துடன் வயோதிபர்கள், நோயாளர்கள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த நிகழ்விக் முக்கியஸ்த்தர்கள் – தற்போதைய பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் தமக்கு கிடைத்த பணத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் எவ்வாறு அதனை பல்மடங்காக்கலாம் என்றே சிந்திக்கின்றனர். ஆனால் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் “ பொதுநலத்திற்காக அதனை பயன்படுத்துகின்றமை பாராட்டகூடியது“