About Us

Thiyahie Charitable Trust organization has been registered under social service voluntary organization regulations section 31 of 1980. Registration Number is N/DS/SS/SS/2004/01 dated - 2004/01/19. The Thiyahie Charitable Trust main Operational District is Jaffna. However its Educational activities are extended to schools and backward areas in other parts of the country Viz. Batticaloa Dist, Trincomalee Dist, Kurunegala Dist and Hill country. Our other activities are presently confined to Jaffna District. The founder and the chairman of the Trust Mr. Thiyagendran (Thiyahie) who is residing in Switzerland, soley funds for the activities and administration of this organization.

Aaruthal Inauguration

கணவனை இழந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு எமது நிறுவனத்தினால் உதவிகள்

கணவனை இழந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு எமது நிறுவனத்தினால் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.இதன் ஒரு பகுதியாக கடந்த காலங்களில் தையல் பயிற்சியும், கண்காட்சியும், நடைபெற்றது.யுத்ததினாலும், இயற்கையனர்த்ததினாலும் தங்கள் கணவன்மாரையும், குடும்பத்திலுள்ள வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் வயது வந்த ஆண்பிள்ளைகளையும் இழந்து துன்பப்படும் பெண்களுக்கு வழங்கப்படும் இவ்வாறான உதவிகள் மூலம் எமது நிறுவனத்தின் ஸ்தாபகர் – பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் “குடும்பத்திற்கு தலைமைதாங்கும் பெண் என்கின்ற சமூக அந்தஸ்த்தை உருவாக்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடதக்கது. மேலும் வாசிக்க

அமைச்சர்களுடன் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர்.

சித்தாலேப நிறுவனத்தின் அனுசரனையுடன் நடைபெற்ற நிகழ்வில் கடந்த ஐனவரி மாதம் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர்.“சித்தாலேப ” நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற வடமாகாண முன்பள்ளி சிறார்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பரிசுப்பொதிகளை வழங்கி வைத்தார்.

நாவலர் வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிலையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும் வாசிக்க

பொலிஸ் அவசர சேவை நிலையம்

 ”மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற” என்ற உன்னத கருத்துக்கேற்ப செயற்பட்டு வரும் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் முதல்வர் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தனியாகவும் அரச நிறுவனங்களுடனும் இணைந்து நடைமுறைப்படுத்தி வருகின்றார்.யாழ் நகரத்தில் நடைபெறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ் நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டு பொலிஸ் அவரச சேவை நிலையம் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.தியாகி அறக்கொடை நிலையத்தின் அணுசரனையில் நவீன முறையில் அமைக்கப்பட்ட இந்த சேவை நிலையம் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா திறந்துவைத்தார். மேலும் வாசிக்க

திரு. வாமதேவா தியாகேந்திரன் அவர்களின் 62வது பிறந்ததின வைபவம்

எமது நிறுவன ஸ்தாபகர் மதிப்பிற்குறிய திரு. வாமதேவா தியாகேந்திரன் அவர்களின் 62வது பிறந்ததின வைபவம் (2- 12 – 2013) அன்று சொர்ணாம்பிகை மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. இதில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுந்தரம் அருமைநாயகம் உட்பட பல முக்கியஸ்தர்களும், பயனாளிகளும், ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.வறுமை காரணமாக கல்வியை தொடரமுடியாத மாணவர்கள், போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோரை இழந்த மாணவர்கள் அத்துடன் வயோதிபர்கள், நோயாளர்கள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த நிகழ்விக் முக்கியஸ்த்தர்கள் – தற்போதைய பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் தமக்கு கிடைத்த பணத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் எவ்வாறு அதனை பல்மடங்காக்கலாம் என்றே சிந்திக்கின்றனர். ஆனால் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் “ பொதுநலத்திற்காக அதனை பயன்படுத்துகின்றமை பாராட்டகூடியது“ என்றனர் மேலும் வாசிக்க

புற்று நோயாளர்களுக்கான மாதாந்த உதவித்திட்டம் யாழ் போதனா வைத்தியசாலை ஊடாக..

எமது நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்டு வரும் புற்று நோயாளர்களுக்கான மாதாந்த உதவித்திட்டத்தினை பரவலாக்கும் நோக்குடன் தற்பொழுது யாழ் போதனா வைத்தியசாலை புற்று நோயாளர் பிரிவின் ஊடாக இணைந்து கடந்த மாதம் முதல் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றார்கள்

மலையகத்திலிருந்து வாழ்த்து……..

தியாகி அறக்கொடை நிறுவனத்திலிருந்து  உதவித்தொகைப்பெறும் மக்களின் சார்பாக வழங்கப்பட்ட வாழ்த்துச்செய்தி, கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பல நுாற்றுக்கனக்கான மலையக மாணவர்களும், வயோதிபர்களும்  எமது நிறுவனத்தினுாடாக  பயன்பெறுகின்றனர். அவர்களின் வாழ்த்துச்செய்துடன், ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு. மலையகத்தை பொறுத்தவரை 5ம் ஆண்டுக்கு மேல் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் என்ணிக்கை பொருளாதார சுமையின் காரனமாக வெகுவாக குறைந்துகொண்டு செல்கின்றது – எங்களது நிறுவனத்தின் உதவி தொகை இந்த மாணவர்களுக்கு ஒரு பெரும் வாய்ப்பாகும். மாணவர்களை போலவே பொருளாதார சுமையின் காரணமாக, எவ்வித வருமானமும் இல்லாமல் வயோதிபர்களுக்கும் மாதாந்த உதவத்தொகை வழங்கப்படுகின்றது. மலையகத்தில் வேறு எந்த அரசியல் அமைப்புகளோ, தன்னார்வ தொன்டு நிறுவனங்களோ இவ்வாறான சமூகபனிகளை மேற்கொள்ளுவது இல்லை என்பது குறிப்பிடதக்கது.

மேலும் வாசிக்க