எழிலூர் அன்ணை வேளாங்கன்ணி முன்பள்ளி,நூலகம் திறந்து வைப்பு

கொழும்புத்துறை,எழிலூர் அன்ணை வேளாங்கன்ணி முன்பள்ளி மற்றும் இரவுபாடசாலை என்பன நேற்று முன்தினம் (24-02-2015) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டதுன.

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளியை பிரதம விருந்தினராக கலந்துக்கொண்ட வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வே.கே .சிவஞானம் திறந்து வைத்தார்.
பாசையூர் பங்கு தந்தை அருட்திரு லியோ ஆம்ஸ்டேரங் அடிகளார் ஆசியுரை வழங்கஜனார். தியாகி அறக்கொடையின் நிறுவனர் திரு.வாமதேவா தியாகேந்திரன் அவர்கள் நினைவுகல்லையும் பெயர்பலகையும் திரைநீக்கம் செய்தவைத்தார்.மாணவர்களுக்கான கற்றல் உபகரனங்களும் இதன்போது அன்பளிப்பு செய்யப்பட்டன.

EA3 E5 E4 E3 e2 E2 e1 E1

 

சிறப்பு விருந்தினர்களாக யாழ் பிரதி கல்விப் பணிப்பாளர் சி.மாணிக்கரசா,யாழ்மநகரசபை பொதுசனதொடர்பு உத்தியோகத்தர் என்.லோகசிவம் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக யாழ் மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் து.இளங்கோவன் மற்றும் அறக்கொடையின் பணிப்பாளர் ,பணியாளர்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

அத்துடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் தியாகி அறக்கொடை நிறுவனத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

0 Comments