“கற்றல் வள நிலையம்” புனரமைப்பு

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் 5இலட்ச ரூபா நிதியுதவியுடன் யாழ் கனகரதத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தின “கற்றல் வள நிலையம்” புனரமைப்பு செய்யப்பட்டு வைபவரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்வலய கல்வி பணிப்பாளர் திரு.செ.உதயகுமார் கலந்து சிறப்பித்தார் அத்துடன் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிர்வாகிகள் யாழ் வலய பிரதி கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.மாணிக்கராஐ மற்றும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.பாடசாலையின் அதிபர் உரையாற்றும் போது ஆரம்பத்திலிருந்தே மாணவர்களை வாசிப்பில் ஊக்குவிப்பதன் ஊடாக அறிவும் ஆற்றலும் ஆளுமையும் பெற்ற மாணவ சமூதாயத்தை உருவாக்கமுடியும் எனகுறிப்பிட்டார்.w2w3w5w4w7

0 Comments