எம்மைப் பற்றி

இந் நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு. வாமதேவா தியாகேந்திரன் அவர்கள் இயற்கையாகவே உதவும் உள்ளங்கொண்டவர். தனது வருவாயில் பெரும்பகுதியை நலிவுற்ற மக்களுக்காக உதவி வந்தார். 2002ம் ஆண்டு இந்நிறுவனத்தை ஆரம்பித்து ஒரு சபை அமைத்து அதன் ஊடாக தனது உதவியை ஆரம்பித்தார். இந்த உதவி தொடர் நடவடிக்ககையாக வேண்டும்மென்ற பெரும் எண்ணங்கொண்டு ஒரு வருமானம் தரக்கூடிய செயற்பாட்டை ஆரம்பித்து அதன்மூலம் வரும் வருமானத்தை நலிவுற்றவர்களுக்கு உதவ நினைத்து சபையுடனும் ஆலோசித்து 2004ம் ஆண்டு ரிசிரி பல்பொருள் அங்காடி என்ற விற்பனை நிலையத்தினை ஆரம்பித்தார். தான் இருக்கும் வரை அறப்பணி என்று இல்லாது, தனக்குப் பின்னும் அறப்பணி தொடரவேண்டும் என்ற அவர் எண்ணம் மிக மிக மேன்மையானது. இந்த நிலையத்தின் மூலம் பெண்தலைமைத்துவ மற்றும் நலிவுற்ற குடும்பங்களிலிருந்து 60ற்கும் மேற்பட்ட பணியாட்களைத் தெரிவு செய்து வேலை வாய்ப்பளித்து குடும்ப நிலையை மேம்படுத்தவும் இந்த விற்பனை நிலையத்திலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு அறப்பணியைச் செய்யவும் தீர்மானித்தார். இதன்; ழூலம் இங்கு கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் அவர்களுக்கு தெரியாமலேயே அறப்பயின் பங்காளர்கள் ஆகவும் ஆக்கிக் கொண்டார்.
2010ம் ஆண்டு தனது தாயாரின் பெயராகிய சொர்ணாம்பிகை மண்டபமொன்றை நிர்மாணித்து அதில் எந்தவிதமான நிகழ்வானலும் மிகக் குறைந்த செலவில் நிறைந்த சேவையை வழங்க்கூடிய வகையில் ஒழுங்கமைத்து அதன்; ழூலம் வரும்வருமானத்தையும் அறப்பணியில் இணைத்துக் கொண்டார்.
இதற்கமைவாக
1) பெண் தலைமைத்துவ குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்விச் செயற்பாட்டிற்கான மாதாந்த உதவி
2) பெண் தலைமைத்துவ குடும்பங்களிலுள்ள திருமணவயதில் திருமணமாகாமலிருக்கும் பிள்ளைகளுக்கான மாதாந்த உதவி
3) ஆதரவற்ற முதியோர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு
3) ஆதரவற்ற முதியவர்களுக்கான வாராந்த இலவச மருத்துவசேவை
5) பின்தங்கிய குடும்பங்களிலள்ள புற்று நோயாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு
6) ஆதரவற்ற பெண் பிள்ளைகளுக்கான சிறுவர் இல்லம் ஒன்று 2004ம் ஆண்டு சுனாமி தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டது.
7) பலருக்குப் பயனளிக்கக்கூடிய வகையில் இனங்காணப்படும் சமூகசேவைகள்