பல்லின யாழ் பல்கலை மாணவர்களுக்கான உதவிகள்

இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரின் வேலைதிட்டத்தின் கீழ் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதி பங்களிப்பின் 2 வது கட்டமாக யாழ்.பல்கலைக்கழகத்தில் தனியார் விடுதிகளில் தங்கி கல்வி கற்கும் தமிழ், சிங்கள,மலையக மற்றும் முஸ்லிம் பல்கலாச்சாரமுடைய பல்வேறுபட்ட பிரதேசங்களில்

வாழும் மாணவர்கள் கொரோனா இடரினால் தமது விடுதிகளின் வாடகைப்பணத்தை செலுத்த வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலையிலே அவதியுற்ற நேரத்திலே மேற்குறிப்பிட்ட #TCT(Thiyahie Charitable Trust) நிறுவனத்தின் ஸ்தாபகர் சமூக சேவையாளர்
உயர் திரு.#தியாகேந்திரன் அவர்கள் தனியார் விடுதியில் இருந்து கல்வி பயிலும் #பல்கலைக்கழக_மாணவர்களின் மற்றும் அவர்களின் குடும்ப நிலையை அறிந்து கொண்டு தனியார் விடுதிக்கான இரண்டு மாத வாடகைப் பணத்தை(தலா 5000 ரூபா) தாமே மாணவர்களிடம் நேரடியாக மற்றும் அவ் தனியார் விடுதி உரிமையாளரிடம் வழங்கி கொண்டிருப்பதோடு இக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு எவ்வித சமூக பாரபட்சமுமின்றி சமமான முறையிலே அவர்களின் குடும்ப #வறுமையை_மட்டுமே கருத்தில் கொண்டு இவ் உதவியை மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.

மேலும் #200_க்கு மேற்பட்ட மாணவர்களின் #வாடகைப்_பணத்தை வழங்க தயாராக உள்ளார் எனவும் அதை விட அவர்களுக்கான எவ்வாறான தேவையென்றாலும் தன்னிடம் கேட்குமாறும் குறிப்பிட்டிருந்தார்.

அவ் மாணவர்கள் கிராம சேவையாளரினால் உறுதிப்படுத்தலுடன் மற்றும் #குடும்ப_அங்கத்தவர்கள்_எண்ணிக்கை, #தந்தை_தாயை_இழந்த_மாணவர்கள், #பெண்தலைமைக்_குடும்ப_மாணவர்கள் போன்றவறின் ஊடாகவும் தெரிவு செய்யப்பட்டு உண்மையில் சரியான தேவைப்பாடு உடைய மாணவருக்கு சென்றடைய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

அத்துடன் #Covid -19 காலத்தில் மட்டும் கொரோனா பேரிடர் நிலையினை உணர்ந்து இலங்கையில் உள்ள பல்வேறுபட்ட பிரதேசங்களில் வாழும் தேவையுடைய மக்களுக்கு இன்னல்களை போக்கும் நோக்குடன் தனது சொந்த நிதியில் #ஒரு_கோடிக்கும் அதிகமான பணத்தினை மக்களின் நலன் கருதி சேவை புரிந்துள்ளார்.இவ்வகை சேவை மனம் கொண்ட தியாகி.அறக்கொடை நிறுவன உயர்.திரு தியாகேந்திரன்
அவர்களின் சேவையை உளமார பாராட்டுகின்றோம்.

0 Comments