பாடசாலை மாணவர்களுக்கான உதவி

தியாகி அறக்கொடை நிறுவனத்தில் தொழில் புரியும் ஊழியர் நோயுற்று தொடர்ச்சியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரின் பாடசாலை செல்லும் இரு பிள்ளைகளுக்கும் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் அவர்கள் தலா பத்தாயிரம் ரூபா வீதம்; மாதாந்தம் இருபதனாயிரம் ரூபாவினை அவர்கிளின் பொருளாதார நிலையினை கருத்திற்கொண்டு வழங்கவிருக்கின்றார்.

பிள்ளைகளின் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் முடியும் வரைக்கும் தொடர்ச்சியாக இந்த கொடுப்பனவானது வழங்கப்படவிருக்கின்றது.

குறிப்பிட்ட ஊழியர் பல மாதங்களாக வைத்தியசாலையில் அநுமதிக்கப்படடிருக்கும் நிலையிலும் கூட அவருக்கான சம்பளம் நிறுவனத்தின் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய
தொடர்ச்சியாக வழங்கபப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடதக்கது.

0 Comments