பொலிஸ் அவசர சேவை நிலையம்

 ”மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற” என்ற உன்னத கருத்துக்கேற்ப செயற்பட்டு வரும் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் முதல்வர் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தனியாகவும் அரச நிறுவனங்களுடனும் இணைந்து நடைமுறைப்படுத்தி வருகின்றார்.யாழ் நகரத்தில் நடைபெறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ் நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டு பொலிஸ் அவரச சேவை நிலையம் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.தியாகி அறக்கொடை நிலையத்தின் அணுசரனையில் நவீன முறையில் அமைக்கப்பட்ட இந்த சேவை நிலையம் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா திறந்துவைத்தார்.

இந்த அவசர சேவை நிலையம் திறப்பு விழாவில் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெப்றி,யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா ஆகியோர் கலந்துகொண்டனர். –

26012013_policestation 4

26012013_policestation 526012013_policestation 3

0 Comments