போற்றத்தக்க கொரோனா நிவாரணப்பணிகள்

கொரோனா தொற்றுநோய் காரணமாக பொருளாதார ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் எமது மக்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை தனிமனிதராக தனது சொந்த நிதிப்பங்களிப்பில் வழங்கிவரும் தியாகி எனும் ஆளுமைமிக்க மனிதரின் நிவாரணபபணிகள் போற்றதக்கவை.

இன்று பல்வேறுபட்ட உதவித்திட்டங்கள் அவரால் வழங்கிவைக்கப்பட்டன. குறிப்பாக இளவாலையில் பனை மரத்திலிருந்து விழுந்து மரணமான இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தினரின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறியதுடன் ஒரு லட்ச ரூபா நிதியுதவியையும் வழங்கினார்.

அத்துடன் இரு பிள்ளைகளினதும் கல்விக்கான மாதாந்த கொடுப்பனவு மற்றும் குடும்பத்தின் வயதான இருவருக்குமான மாதாந்தக் கொடுப்பனவு மற்றும் அவர்களுடைய வீட்டைக் கட்டி முடிப்பதற்கான நிதிப்பங்களிப்பைத் தான் வழங்க உள்ளதாகவும் திரு.தியாகி அவர்கள் உறுதியளித்துள்ளார்.

மேலும் அன்மையில் வவுனியாவில் குளத்தில் விழுந்து மரணமான குடும்பத்தினருக்கும் ஒரு லட்ச ரூபா வழங்கினார்.

கொரோனா தொற்றுநோய் காரணமாகப் பாதிக்க்பட்டுள்ள மக்களுக்கு நேரடியாகவும் பல்வேறு தரப்பினரூடாகவும் 75 லட்ச ரூபாய்களை பணமாகவும் உணவுப்பொருட்களாகவும் வழங்கியுள்ளார்.

ஐனாதிபதியின் கொரோனா தொற்று நிவாரண நிதிக்காக சுமார் ஒரு கோடி ரூபாய்களை திரு. தியாகி அவர்கள் வழங்கியதும் இங்கு குறிப்பிடதக்கது.

வடக்கிற்கு மாத்திரமல்ல மலையகம், கொழும்பு, ஊவாமாகாணம் என நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் இவரால் பல லடச ரூபாய்கள் மக்களுக்கு உதவியாக வழங்கப்பட்டன.

பிறருக்கு உதவுதல் என்பது குணமல்ல……வரம்!

0 Comments