வவுனியா வைத்தியசாலைக்கு குடிதன்ணீர் வடிகட்டும் இயந்திரத் தொகுதி அன்பளிப்பு

 

தியாகி அறக்கொடையின் சுமார் 35 லட்சம் ரூபா நிதிப்பங்களிப்பில் வவுனியா ஆதார வைத்திய சாலைக்கு குடிதன்ணீர் வடிகட்டும் இயந்திர தொகுதியொன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.

w5 w6 w7 w8வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் நோக்கத்திற்காகவே இந்த இயந்திர தொகுதி வழங்கப்பட்டது.குறித்த இயந்திரத்தின் பராமரிப்பு செலவையும் ஐந்து வருடங்களுக்கு வழங்கவிருப்பதாக தியாகி அறக்கொடை நிறுவனம் தெரிவித்தள்ளது.
இந்த நிகழ்வின் போது புற்றுநோயாள் பாதிப்புற்றுள்ள 20நோயாளர்களின் மருத்துவ செலவிற்காக மாதாந்தம் 800ரூபா வழங்கும் திட்டமொன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிலத்தடி நீரை அப்படியே அள்ளிகுடித்த நிலமை மாறி இப்போது அதனை சுத்திகரித்து குடிக்கவேண்டிய நிலை வந்திருப்பது குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் இந்நிகழ்வின்போது கவலை தெரிவித்தார்.

0 Comments