திரு. வாமதேவா தியாகேந்திரன் அவர்களின் 62வது பிறந்ததின வைபவம்

எமது நிறுவன ஸ்தாபகர் மதிப்பிற்குறிய திரு. வாமதேவா தியாகேந்திரன் அவர்களின் 62வது பிறந்ததின வைபவம் (2- 12 – 2013) அன்று சொர்ணாம்பிகை மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. இதில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுந்தரம் அருமைநாயகம் உட்பட பல முக்கியஸ்தர்களும், பயனாளிகளும், ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.வறுமை காரணமாக கல்வியை தொடரமுடியாத மாணவர்கள், போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோரை இழந்த மாணவர்கள் அத்துடன் வயோதிபர்கள், நோயாளர்கள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த நிகழ்விக் முக்கியஸ்த்தர்கள் – தற்போதைய பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் தமக்கு கிடைத்த பணத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் எவ்வாறு அதனை பல்மடங்காக்கலாம் என்றே சிந்திக்கின்றனர். ஆனால் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் “ பொதுநலத்திற்காக அதனை பயன்படுத்துகின்றமை பாராட்டகூடியது“ என்றனர்TP
எமது நாட்டில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதிகளவிலான தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கொடை நிறுவனங்கள் உள்ளபோதும் இவை அனைத்தும் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த எம்மவர்களின் பொருளாதார உதவியை மாத்திரம் நம்பியே செயற்பட்டு வருகின்றது. ஆனால் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் இதனை வெளியாரின் பொருளாதார உதவியின்றி தன்னிறைவுடன்,சுயமாக இயங்ககூடிய விதத்தில் கட்டியெழுப்பியுள்ளார்

b1

வைரவர் கோவில்

b2

விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டபோது

DSC07730 - Copy

கிருஸ்தவ சமய பாதிரியார் மற்றும் முஸ்லிம் பாடசாலை ஒன்றின் அதிபர்

b4

பௌத்த மதகுரு மங்கள விளக்கை ஏற்றுகின்றார்

b5

அறக்கொடையின் சிறுவர் இல்லத்தை சேர்ந்த பிள்ளைகள்

b7

எமது சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சிறுமியின் நடனம்

b6

இந்து சமய ஆன்மிக குருவின் ஆசியும் வாழ்த்துக்களும்

 

0 Comments